வெற்றிலை ரசம்

தேவையானவை:  வெற்றிலை – 6, தக்காளி – 2, உப்பு – தேவையான அளவு, மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள் – 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தாளிக்க: நெய் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 சிட்டிகை.

செய்முறை: தக்காளியை நறுக்கி, ஒரு பாத்திரத்தில் சேர்த்து அத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். லேசாக கொதி வரும்போது வெற்றிலையை அரைத்து வடிகட்டி சாறு எடுத்து கலவையில் சேர்த்துத் தாளிக்கக் வேண்டியதை தாளித்து சேர்த்தால், வெற்றிலை ரசம் ரெடி.

Sharing is caring!