வெள்ளரிக்காய் கூட்டு

வெள்ளிக்காயை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இன்று வெள்ளிக்காயில் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த கூட்டு சூடான சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் – 1
துவரம்பருப்பு – கால் கப்
தேங்காய் துருவல் – சிறிதளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு
பால் – கால் கப்
பச்சை மிளகாய் – 4
சீரகம் – 1 டீஸ்பூன்
சி.வெங்காயம் – 5
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பருப்பை வேகவைத்துக்கொள்ளுங்கள்.

சீரகம், ப.மிளகாய், சி.வெங்காயம், தேங்காய் துருவல் ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி பால் சேர்த்து வேக வைத்துக்கொள்ளுங்கள்.

வெள்ளரிக்காய் நன்கு வெந்ததும் அதனுடன் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறுங்கள்.

நன்கு கொதித்து வரும்போது அரைத்த தேங்காய் விழுதை கொட்டி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெள்ளரிக்காய் கூட்டில் கலந்து பரிமாறலாம்.

சூப்பரான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி.

Sharing is caring!