ஸ்பைசி மீன் வறுவல்…

காராசாரமான முறையில் மீன் வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

முள் இல்லாத மீன் – அரை கிலோ
தேங்காய் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

அரைப்பதற்கு…

சின்ன வெங்காயம் – 10
இஞ்சி – 2 இன்ச்
பூண்டு – 6 பற்கள்
மஞ்சள் தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

சுத்தம் செய்த மீன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது ஸ்பெஷல் ஸ்பைசி மீன் வறுவல் ரெடி

Sharing is caring!