ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கொள்ளு ரசம் செய்முறை

இந்த காலக்கட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் ஆரோக்கியம் தரும் கொள்ளு ரசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கொள்ளு – 1 கப்
வரமிளகாய் – 3
தனியா (மல்லி) – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
பெரிய வெங்காயம் – 1/2
அல்லது சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
பூண்டு – 3 பல் நறுக்கியது
எண்ணெய், கடுகு – சிறிதளவு

செய்முறை: கொள்ளு தானியத்தை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு, வரமிளகாய், தனியா (மல்லி), சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். வேண்டுமானால் வேகவைத்த தண்ணீர் சேர்க்கலாம்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதிவிட்டு எடுக்கவும். ஆரோக்கியம் நிறைந்த கொள்ளு ரசம் தயார்.

Sharing is caring!