உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் தூதுவளை தோசை செய்முறை

உடலுக்கு ஆரோக்கியம் தரும் தூதுவளை தோசை செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1 கப்
புழுங்கல் – அரிசி 1 கப்
துவரம் பருப்பு,
கடலைப்பருப்பு – தலா 1 மேஜைக்கரண்டி
தூதுவளை இலைகள் – 1 கப்
பச்சை மிளகாய் – 6 (அ) காய்ந்த மிளகாய் – 8
உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

செய்முறை: அரிசி பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். இதனுடன் சுத்தம் செய்த கீரை, மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்தெடுத்து, உப்பு சேர்த்து கரைத்து 3 மணி நேரம் வைத்திருங்கள். புளித்துவிடும். குளிர் காலத்தில் அதிக நேரம் தேவைப்படலாம்.

சற்று கனமான தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு வேகவைத்து எடுங்கள். ஆரோக்கியம் தரும் தூதுவளை தோசை தயார்.

Sharing is caring!