ருசியோ ருசி என்று ரசித்து சாப்பிட தேங்காய் பால் குழம்பு செய்முறை

ருசியோ ருசி என்று அனைவரும் பாராட்டும் விதத்தில் தேங்காய் பால் குழம்பு செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் – அரை கப்
மிளகு – அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு – கால் கப்
கீறிய பச்சை மிளகாய் – 2
புளி, கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவலை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, முதல் பால், இரண்டாம் பால் என எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில், தேங்காய் எண்ணெய் விட்டு மிளகு, கீறிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும்.

வேகவைத்த கடலைப்பருப்பு, புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, இரண்டாம் தேங்காய்ப்பாலை விடவும். அது, கொதித்து கெட்டியாக வந்ததும் முதல் தேங்காய்ப்பாலை விட்டு, உடனே இறக்கி விடவும். கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

Sharing is caring!