மாலை வேளையில் சாப்பிட சுவையான பிரட் சாட் செய்முறை உங்களுக்காக!!!

மாலை வேளையில் நல்ல சுவையான சாட் ரெசிபிக்களை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா. இங்கு கொடுக்கப்பட்டுள்ள பிரட் சாட் ரெசிபியை செய்து பாருங்கள். இது மிகவும் ஈஸியாக இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்தவாறு இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பிரட் – 5
கெட்டியான தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – 1 டீஸ்பூன்
சில்லி பவுடர் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய – 1 (பொடியாக நறுக்கியது அல்லது அரைத்தது)
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
சேவ் – சிறிது

செய்முறை: முதலில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், பிரட்டில் முன்னும் பின்னும் நெய் தடவி தோசைக்கல்லில் போட்டு டோஸ் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த பிரட் துண்டுகளை தட்டில் பரப்பி வைத்துக் கொண்டு, அவற்றின் மேல் முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை தூவி விட வேண்டும். பின்பு உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா, மல்லி தூள் மற்றும் சீரகப் பொடி தூவி விட வேண்டும்.

பிறகு ஸ்பூன் பயன்படுத்தி தயிரை பிரட் துண்டுகளின் மேல் ஊற்றி, இறுதியில் சேவ் என்னும் மிக்ஸரை தூவி பரிமாறினால், பிரட் சாட் ரெடி. உங்கள் குடும்பத்தினரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

Sharing is caring!