லாக்டவுன் பிரச்சினையால் பலரும் விரும்பி உண்ணும் உணவுகளை மிஸ் பண்றீங்களா?

கொரோனா லாக்டவுன் பிரச்சினையால் பலரும் விரும்பி உண்ணும் உணவுகளை வெளியே சென்று சாப்பிடமுடியாமல் தவித்து வருகின்றனர்.

அதிலும் முக்கியானது என்றால் பாஸ்புட் உணவுகள் தான். என்னதான், பாஸ்புட் உணவுகளில் உடலுக்கு கேடுதல் அதிகம் இருந்தாலும், அளவோடு சாப்பிட்டால் நல்லது தான்.

இந்த பதிவில் எளிமையாக எப்படி எக் ரைஸ் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்..

முதலில் இதற்கு பாஸுமதி அரிசியை ஒன்றோடொன்று ஒட்டாமல் கொஞ்சமாக உப்பு சேர்த்து, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வேக விட்டு, வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து, இந்த சாதம் ஆறிய சாதம் ஆக இருக்க வேண்டும். உதிரி உதிரியான சாதகமாக இருக்க வேண்டும். பின்னர், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பாதி அளவு தக்காளி பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் 2 பொடியாக நறுக்கியது, இந்த பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் இருக்கும் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். அதில் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ளவும்.

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கோஸ், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் 1/2 ஸ்பூன், தக்காளி இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இதனையடுத்து, இந்த கலவை அனைத்தும் நன்றாக வதங்கியவுடன், அப்படியே தோசைக்கல்லில் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, அதே தோசைக்கல்லில் 2 முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.

இந்த முட்டையை உடனடியாக கலக்கக்கூடாது. முட்டை 20% வெந்தவுடன் முட்டையை நன்றாக கலக்கி பொடிமாஸ் செய்து கொள்ளுங்கள். பொடிமாஸ் செய்யும் போது முட்டை முழுமையாக வந்துவிட வேண்டும். முட்டையை சாதத்துடனோ, அந்த மசாலாவுடனோ சேர்த்து பொடிமாஸ் செய்தால், அந்த முட்டையின் வாசம் எல்லாவற்றிலும் வீசும். தனியாக முட்டையை பொடிமாஸ் செய்யும் பட்சத்தில் முட்டையின் நீச்ச வாடை எக் ரைஸில் வராது. இப்போது ஒதுக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி கலவையோடு இந்த முட்டை பொடிமாஸ் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும்.

எல்லாம் ஒன்றாகக் கலந்த உடன், உதிரி உதிரியாக வடித்து வைத்திருக்கும் சாதத்தில் இருந்து 2 பெரிய குழி கரண்டி அளவு சாதத்தை தோசைக்கல்லில் சேர்க்க வேண்டும்.

அடுத்ததாக, சாதத்தை சேர்த்த பின்பு மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், மல்லித் தூள் 1/2 ஸ்பூன், கரம் மசாலா 1/4 ஸ்பூன், மஞ்சள்தூள் 1 சிட்டிகை, மிளகு தூள் 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு பொடியை தூவி சாதத்தையும் மற்ற வெங்காயம் தக்காளி முட்டை பொடிமாஸ் சேர்ந்த மசாலா பொருட்களையும் நன்றாக ஒரு கரண்டியை கொண்டு கிளறிவிட வேண்டும்.

இப்படி கிளறும் போது உங்களுடைய அடுப்பின் தீயை வேகமாக வைக்க வேண்டும். மொத்தமாக இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் சாதம் நன்றாக சூடு ஆன பின்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறுங்கள். இப்போது சூடான சுவையான எக் ரைஸ் ரெடி!….

Sharing is caring!