அருமையான சுவையில் பாதாம் பருப்பு பாயசம் செய்முறை

உங்கள் வீட்டில் விஷேசமா? உடனடி பாயசம் வேண்டுமா? உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த பாதாம் பருப்பை வைத்து உடனடி பாயசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு – 100 கிராம், பால் – 3 கப், சர்க்கரை – 1 கப், ஏலக்காய் – 7, முந்திரி பருப்பு – 6, பிஸ்தா பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், குங்குமப்பூ அல்லது கேசரிப் பவுடர்- சிறிதளவு, நெய் – 3 டீஸ்பூன்

செய்முறை: முதலில் முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக உடைத்து கொள்ளவும். பின்னர் அதை பிஸ்தா பருப்புடன் சேர்த்து நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும். இதையடுத்து பாதாம் பருப்பைக் கொஞ்சம் சூடான வெந்நீரில் போட்டு, ஒரு மணி நேரம் கழித்துத் தோலை எடுத்து விட்டு, அம்மியில் அல்லது மிக்சியில் நைசாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதை 3 கப்பு தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அடிக்கடி கிளறிவிடவும். பச்சை வாசனை இல்லாமல் நன்றாக கொதிக்கவிட்டு, சர்க்கரையைப் போடவும். சர்க்கரை நன்றாக கரைந்தபின் பாலை ஊற்றி மற்ற பொருட்களையும் போட்டு கொதித்தவுடன் இறக்கிவிடவும். அடுத்து நெய், குங்குமப்பூ சேர்த்தால் சுவையான பாதாம் பருப்பு பாயாசம் தயார்.

Sharing is caring!