அருமையான சுவையில் அரிசிமாவு தேங்காய் கொழுக்கட்டை செய்முறை

அரிசி மாவு தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து அட்டகாசமான கொழுக்கட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

அரிசிமாவு
வெண்ணீர்
நெய் அல்லது எண்ணெய்
தேங்காய்
சர்க்கரை
உப்பு

செய்முறை: முதலில் அரிசி மாவை பிசைந்து கொள்வதற்காக இரண்டு துளி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வெண்ணீர் வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு கப் அரிசி மாவு எடுத்தால், ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

நன்றாக தண்ணீர் சேர்த்து உப்பும் லேசாக சேர்த்து மாவை பிசைந்து வைக்கவும். அதன் பின் சர்க்கரை அல்லது வெல்லம் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.

முதலில் ஒரு சட்டியில் சர்க்கரை வைத்திருந்தால் சர்க்கரையை சேர்த்து நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் அடுப்பில் வைத்து லேசாக சூடு ஏற்றி தேங்காய் துருவலை சேர்த்து எடுத்துக் கொள்ளவும். பாசிப்பயறு இருந்தால் அதை இத்துடன் சேர்த்து கொள்ளலாம்.

அதன் பின் ஏற்கனவே நாம் பிசைந்து வைத்துள்ள அரிசி மாவை சிறு உருண்டைகளாக எடுத்து அவற்றை தட்டி தேங்காய் சர்க்கரை கலவையை உள்ளே வைத்து மடித்து வைத்து வைக்கவும். 5 நிமிடத்தில் எடுத்தால் அட்டகாசமான அரிசிமாவு கொழுக்கட்டை வீட்டிலேயே தயார்.

Sharing is caring!