அருமையான சுவையில் உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட் செய்முறை

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து சூப்பரான ஆம்லெட் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

முட்டை – 4
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 4
உருளைக்கிழங்கு – 2
கறிவேப்பிலை சிறிதளவு
வெங்காயம் – 1
வெண்ணெய் சிறிதளவு

செய்முறை: வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும். முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி, உப்பு கலந்து நன்றாக அடித்து கொள்ளவும். இதில் நறுக்கிய வெங்காயம், வறுத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் அதில் உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி சுற்றி சிறிது வெண்ணெய் போட்டு ஆம்லெட் போல் வேக விடவும். இப்பொழுது ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு வேக விட்டு எடுத்து தட்டில் வைத்து முக்கோணமாக கேக் வெட்டுவது போல் வெட்டி பரிமாறவும். கண்டிப்பாக மாறுதலான சுவையை உணரலாம்.

Sharing is caring!