வித்தியாசமான சுவையில் ஆரஞ்சு புலவு செய்வது பற்றி உங்களுக்காக!!!

வித்தியாசமான சுவையில் ஆரஞ்சு புலவு செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், ஆரஞ்சு சாறு – 2 கப், பட்டை – 1 துண்டு, லவங்கம் – 2, நெய் -2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.தாளிக்க: பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 4, பட்டாணி – ஒரு கைப்பிடி, முந்திரிப்பருப்பு – 5,நெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பாசுமதி அரிசியை நன்கு கழுவி ஆரஞ்சு சாறு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம்ஊற விடுங்கள். பின்னர் ஒரு குக்கரில் பட்டை, லவங்கம், உப்பு ஊற வைத்த அரிசி (அரஞ்சு சாறுடனேயே)சேர்த்து கலந்து மூடி, ஒரு விசில் வந்ததும் தீயை குறைத்து 5 நிமிடம் வைத்து இறக்குங்கள்.

நெய்யை காய வைத்து, முந்திரிப்பருப்பு தாளித்து மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய்,சிட்டிகை உப்பு, பட்டாணி சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி புலவில் சேருங்கள். நன்கு கிளறிபரிமாறுங்கள். வித்தியாசமான சுவையுடன் மணக்கும் ஆரஞ்சு புலவு இது.

Sharing is caring!