நெல்லிக்காய் இஞ்சி லேகியம்

தேவையானவை:

பெரிய நெல்லிக்காய்  6,
இஞ்சி  ஒரு சிறிய துண்டு,
தக்காளி  ஒன்று,
சீரகத்தூள்  ஒரு டீஸ்பூன்,
நெய்  2 டீஸ்பூன்,
கல்கண்டு  250 கிராம்.

செய்முறை:

நெல்லிக்காயைக் கழுவி, தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் வேகவிடவும். தக்காளியை சுடுநீரில் போட்டு, ஒரு நிமிடம் கழித்து எடுத்து தோல் உரித்து வைக்கவும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி… இஞ்சி, தக்காளியுடன் சேர்த்து நைஸாக அரைக்கவும். கல்கண்டை பாகு போல காய்ச்சி, அரைத்த நெல்லிக்காய் விழுது, சீரகத்தூள், நெய் விட்டு, நன்றாக லேகிய பதம் வரும் வரையில் கிளறி இறக்கவும். இந்த லேகியம் கபத்தை நீக்கும். பித்தத்தை எடுக்கும்.

Sharing is caring!