ஆரோக்கியம் நிறைந்த வெள்ளரி கேரட் சாலட் செய்முறை

ஆரோக்கியத்திற்கு உகந்த வெள்ளரி- கேரட் சாலட் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையானவை:

வெள்ளரி- 1,
அரை கப் ரைஸ் வினிகர்,
இரண்டரை கப் நறுக்கிய வெங்காயம்,
அரை கிராம் அரைத்த இஞ்சி,
அரை டீ ஸ்பூன் உப்பு,
ஒன்றரை கப் கேரட் (நறுக்கியது),
ஒன்றரை டீ ஸ்பூன் சர்க்கரை,
இரண்டரை தேக்கரண்டி சிவப்பு குடை மிளகாய் (நறுக்கியது),
1 டீ ஸ்பூன் வெஜிடபிள் ஆயில்.

செய்முறை: ஒரு சிறு பாத்திரத்தை எடுத்து அதில் உப்பு, இஞ்சி, வெஜிடபிள் ஆயில், சர்க்கரை, ரைஸ் வினிகர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு வெங்காயம், கேரட், குடை மிளகாய், வெள்ளரி சேர்த்து நன்றாக கிளறவும். இவை அனைத்தையும் உங்களுக்கு பிடித்த அளவில் நறுக்கிக் கொள்ளவும். இதனை பிளாஸ்டிக் கவர் வைத்து மூடி ஃபிரிட்ஜில் வைக்கவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு எடுத்தால், ஜில்லென டேஸ்டியான ஹெல்தி சாலட் ரெடி!

Sharing is caring!