சமையல் சுவையாக இருக்க உங்களுக்காக சில யோசனைகள்

சமையல் என்பது அருமையான கலை. பலருக்கு இது கை வந்த கலை. அந்த சமையலை சுவையாக சமைக்க சில பயனுள்ள குறிப்புகள் உங்களுக்காக.

பால் இளஞ்சூடாக இருக்கும்போது உறை ஊற்றினால்தான் தயிர், சுவையாக இருக்கும். சில சமயம் இட்லி மாவு உளுந்து விழுது காணாமல் கல் மாதிரி ஆகிவிடும். அப்போது மாவில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து பின் இட்லி சுட்டால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு கரண்டி ரவையை சேர்த்து பிசைந்தால் பூரி உப்பலாக இருக்கும். தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைத்தால் இரண்டு, மூன்று நாட்களுக்கு தயிர் புளிக்காமல் இருக்கும். தோசைக்கு, இட்லிக்கும் மாவு ஆட்டும்போது ஒரு வெண்டைக்காய் சேர்த்து ஆட்டினால் இட்லி பூப்போல இருக்கும்.

Sharing is caring!