அவல் வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி ?

அவல் வகைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகளும், உடல் எடையை குறைக்கவும், நீரிழிவு நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறையவும் உதவிகரமாக இருக்கின்றன.

அவல் வெஜிடபிள் கட்லெட்தேவையான பொருட்கள் :

அவல் – ஒரு கப்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
தோல் சீவி நறுக்கிய காய்கறி (கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட்) – அரை கப்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – பெரியது 1
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
சோள மாவு, ரஸ்க் தூள் – தலா 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அவலை அலசி 10 – 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி நறுக்கிய வெங்காயம், நறுக்கிய காய்கறிகள், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து வேகவிடவும்.

இத்துடன் ஊறிய அவல், மிளகாய்த்தூள் சேர்த்துப் புரட்டி கொத்தமல்லித்தழை, சோள மாவு சேர்த்துக் கிளறி அடுப்பை நிறுத்தவும்.

இந்தக் கலவையை சிறு உருண்டைகளாகப் பிடித்து ரஸ்க் தூளில் புரட்டி விருப்பமான வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்துகொள்ளவும்.

தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு சூடாக்கி அவல் கட்லெட்டைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகப் வேகவைத்து எடுத்து சாஸுடன் பரிமாறவும்.

Sharing is caring!