சிக்கன் மீட்பால் சூப் செய்வது எப்படி ??

ரமலான் நோன்பை முடித்த பின் மாலையில் சுவையான சூப் குடிக்க நினைத்தால், சிக்கன் மீட்பால் சூப் செய்து குடியுங்கள். இது மிகவும் ருசியாக இருப்பதோடு மட்டுமின்றி, உடலுக்கு சத்தானதும் கூட. பொதுவாக சூப் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவும். குறிப்பாக இந்த சூப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் மீட்பால் சூப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் மீட்பால் சூப் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கியது)

* கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)

* தண்ணீர் – 4 கப்

* சிக்கன் சூப் க்யூப் – 1 துண்டு

* சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

* தக்காளி கெட்சப் – 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் – சுவைக்கேற்ப

* சோள மாவு – 1 டீஸ்பூன் (நீரில் கலந்து கொள்ளவும்)

* எலுமிச்சை சாறு – தேவையான அளவு

மீட்பால் செய்வதற்கு…

* சிக்கன் கொத்துக்கறி – 1 கப்

* வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* பிரட் தூள் – 3 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் முதலில் மீட்பால் செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு பௌலில் போட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மீட்பால் உருண்டைகளைப் போட்டு, 8-10 நிமிடம் வேக வைத்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதே வாணலியில் சீரகம், இஞ்சி, பூண்டு, கேரட் ஆகியவற்றைப் போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் நீரை ஊற்றி, சிக்கன் சூப் க்யூப் சேர்த்து நன்கு 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் உப்பு, மிளகுத் தூள், சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* இப்போது அதில் மீட்பால் சேர்த்து குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து, பின் நீரில் கரைத்த சோள மாவு சேர்த்து கிளறி விட வேண்டும். இதனால் சூப் சற்று கெட்டியாகும்.

* இறுதியில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து இறக்கினால், சுவையான சிக்கன் மீட்பால் சூப் தயார்.

Sharing is caring!