சிக்கன் சூப் செய்வது எப்படி ??

சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் உணவில் சூப்பை அதிகம் சேர்த்துக் கொள்வது, எதிர்பார்த்த பலனை விரைவில் பெற உதவி புரியும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், குறிப்பாக சிக்கன் பிடிக்குமானால், சிக்கனைக் கொண்டு சூப் செய்து குடிக்கலாம். இது மிகவும் ருசியாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. நீங்கள் இதுவரை கடைகளில் தான் சிக்கன் சூப் வாங்கி குடித்துள்ளீர்களா? வீட்டிலேயே சிக்கன் சூப் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.ஏனெனில் கீழே சிக்கன் சூப் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 300 கிராம்

* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

* தண்ணீர் – 2 கப்

அரைப்பதற்கு…

* சின்ன வெங்காயம் – 10

* கொத்தமல்லி – 1/4 கப்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* மிளகு – 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்

* ஏலக்காய் – 1

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* கறிவேறிப்பிலை – சிறிது

* பெரிய வெங்காயம் – 1 சின்ன வெங்காயம்

செய்முறை:

* முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், கொத்தமல்லி, மிளகு, சீரகத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 3-5 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு தேவையான அளவு நீர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் சூப் தயார்.

Sharing is caring!