ருசியான பர்பி செய்வது எப்படி?

கொரோனா காலத்தில் வீட்டில் அடைபட்டுக்கிடக்கும் மக்கள் வீட்டிலேயே சில ஸ்நாக்ஸை செய்து சாப்பிடலாம். தற்போது தேங்காய் பர்பி எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கே காணலாம்.

தேவையான பொருட்கள்

தேங்காய் – 2 கப்

சர்க்கரை – ஒன்றரை கப்

பால் – 3 ஸ்பூன்

நெய், முந்திரி – சிறிதளவு

செய்முறை

முதலில் வாணலியின் தேங்காயை சிறிது நெய் ஊற்றி வதக்கவும்.

அதில் சர்க்கரையும், பின்பு பால் சேர்த்து நன்கு கிளறவும்.

இவை நன்கு கொதிக்கும் பொழுது தனியாக நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கெட்டியாக வரும் வரை தீயை மிதமாக வைத்து கிளறவும்.

இனி ஒரு தட்டில் நெய் தடவி நன்கு உருண்டு வந்த கலவையைக் கொட்டி லேசான சூட்டில் சிறு சிறு துண்டுகாள போடவும். இப்போது சுவையான, சூப்பரான தேங்காய் பர்பி தயார்

Sharing is caring!