சுவையான தேங்காய் சட்னி சீய்வது எப்படி ??

தமிழர்களின் மிக பிரபலமான காலை உணவு என்றால் இட்லி, தோசை தான், இந்த உணவுகளை கூடுதல் சுவை சேர்ப்பவை சட்னி-கள்.

தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி என சட்னிகளில் பலவகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பெரும்பாலும் தேங்காய் சட்னி விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம், ஆனாலும் இது சீக்கிரம் கெட்டுப்போய்விடும்.

இந்த பதிவில் நீண்டநேரம் கெட்டுப் போகாத சட்னி செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 4
உளுந்தம்பருப்பு – 2 டீ ஸ்பூன்
கடலைப் பருப்பு – 3 டீ ஸ்பூன்
புளி, கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிது எண்ணெய் விட்டு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை வறுக்க வேண்டும்.

பின்னர், இவற்றோடு தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்க வேண்டும். இந்தக் கலவை நன்றாக ஆறிய பிறகு உப்பு, சிறிதளவு புளி சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக, நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான், நீண்ட நேரம் கெட்டுப்போகாத சுவையான வறுத்து அரைத்த தேங்காய் சட்னி ரெடி!!!

Sharing is caring!