சுவையான பூண்டு குழம்பு செய்வது எப்படி?

செட்டிநாடு உணவு வகைகள். நம் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள உணவுகளுக்கு ஒவ்வொரு சுவை உள்ளது போல செட்டிநாடு என அழைக்கப்படும் காரைக்குடி பகுதியில் பரிமாறப்படும் உணவுகளின் சுவையே தனித்துவமானது தான்.

அந்த வகையில், பூண்டில் செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செய்வது எப்படி என்று இங்கு பாப்போம்.

தேவையான பொருட்கள்

 • பூண்டு – 3
 • கடுகு – சிறிதளவு
 • சிறிய வெங்காயம் – இரண்டு கப்
 • தக்காளி – 4
 • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
 • தனியா தூள் – இரண்டு டீஸ்பூன்
 • மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
 • கொத்தமல்லி – சிறிதளவு
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • உப்பு – தேவையான அளவு
 • எண்ணெய் – தேவையான அளவு
 • வெந்தயம் – சிறிதளவு
 • புளி – எலுமிச்சை அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும். பிறகு வெந்தயம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனுடன் தக்காளி சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். இப்போது மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை என அனைத்யும் சேர்த்து வதக்கவும்.

பிறகு புளி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பாக அரை டீஸ்பூன் மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

இப்போது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த சுவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் செட்டிநாடு ஸ்டைல் பூண்டுக் குழம்பு தயாராக இருக்கும்.

Sharing is caring!