இஞ்சி இனிப்பு ஊறுகாய் செய்வது எப்படி?

இஞ்சியை வைத்து செய்யப்படும் இந்த ஊறுகாய் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மைகளை கொடுக்க கூடியது ஆகும். இவை அஜீரண கோளாறுகள், சளி, கபம் போன்ற தொந்தரவுகள் எதுவும் நம்மை அண்ட செய்யாது.

இஞ்சியை எந்த வகையில் நாம் உணவில் சேர்த்து வந்தாலும் உங்கள் ஆயுளில் நாட்கள் அதிகரிக்கத் துவங்கும் என்பார்கள். இப்படி இஞ்சி இனிப்பு ஊறுகாய் எப்படி செய்வது? என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்..

தேவையான பொருட்கள்

  • இஞ்சி – 1/4 கிலோ
  • புளி – 1
  • பெரிய எலுமிச்சை அளவிற்கு
  • பச்சை மிளகாய் – 2
  • நாட்டு வெல்லம் – 1/2 கப்
  • மஞ்சள் தூள் – சிட்டிகை அளவிற்கு
  • பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
  • கடுகு – ஒரு டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – தேவையான அளவிற்கு
  • உப்பு – தேவையான அளவிற்கு

செய்முறை

எப்பொழுதும் இஞ்சியை மட்டும் தோலுடன் பயன்படுத்தக் கூடாது. இஞ்சியில் இருக்கும் தோல் பகுதியானது விஷத்தன்மை கொண்டுள்ளது. ஆனால் பூண்டு அப்படியில்லை தோலுடன் சாப்பிட்டாலும் அதிலும் சத்துக்கள் உள்ளன.

எனவே இஞ்சியை கால் கிலோ அளவிற்கு வாங்கி நன்கு கழுவி தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள்.

வாணலி சூடேறியதும் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்து வந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் பொடிப்பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்கள், நறுக்கிய இஞ்சி துண்டுகளை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

Sharing is caring!