மாங்காய் சுண்டல் செய்வது எப்படி ??

ஸ்வீட் கார்ன் மிகவும் சத்து நிறைந்தது என்பதோடு அத்துடன் கேரட், மாங்காய், தேங்காய் இவற்றை சேர்த்து சாப்பிடுவதால் இன்னும் அதிகமான பலன்களைப் பெறலாம்.

தேவையான பொருட்கள்

சோளம் வேகவைத்து உதிர்ந்தது – 1 கப்
கேரட் துருவியது – சிறிதளவு
மாங்காய் துருவியது – சிறிதளவு
தேங்காய் துருவியது – சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவைக்கேற்ப
கடுகு, பெருங்காயத்தூள், சில்லி ஃப்ளோக்ஸ் – சிறிதளவு

செய்முறை

சோளக்கதிரை வேகவைக்கும் பொழுதே உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.

பின்பு சோளமணிகளை உதிர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, கேரட் துருவியதைப் போட்டு வதக்கி (பச்சை வாசம் போவதற்காக) பின்பு வேக வைத்த சோளம், பெருங்காயத்தூள் போட்டு ஓரளவு வதங்கிய பின்பு உப்பு தேவைப்பட்டால் சேர்க்கலாம்.

சில்லி ஃப்ளோக்ஸ் போட்டு ஒரு கிளறு கிளறி மாங்காய்த் துருவல் மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கலாம்.

கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து பரிமாறலாம்.

இப்போது ஸ்வீட் கார்ன் கேரட் மாங்காய் சுண்டல் ரெடி.

Sharing is caring!