மாம்பழ பர்ஃபி செய்வது எப்படி ??

பெண்கள் தங்கள் வீடுகளில் மாம்பழ பர்பி தயாரித்து வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி அசத்தலாம். இந்த பர்பி தயாரிக்கும் முறை விவரம் வருமாறு:

தேவையான பொருட்கள்:

மாம்பழ துண்டுகள் – 2 கப்
பால் – 2 கப்
தேங்காய் துருவல் – 1 கப்
ரவை – 1.5 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1.5 தேக்கரண்டி

செய்முறை:

ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.

தேங்காய் துருவலுடன் பால் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த விழுதுடன் ரவை சேர்த்து அடுப்பில் வேக வைக்கவும்.

இதனுடன் மாம்பழம், சர்க்கரை சேர்த்து கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி துண்டுகள் ஆக்கவும்.

இப்போது மாம்பழ பர்ஃபி ரெடியாகி விட்டது.

Sharing is caring!