பன்னீர் பாப்கார்ன் செய்வது எப்படி ??

அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பதார்த்தம் என்றால், அது பன்னீரில் செய்யப்படும் உணவுகள் தான். இன்று பன்னீரை வைத்து செய்யப்படும் பன்னீர் பாப்கார்ன் ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பன்னீர்  150 கிராம்
கார்ன் பிளக்ஸ்  – 100 கிராம்
மைதா மாவு – 3 டீஸ்பூன்
சோள மாவு  – 3 டீஸ்பூன்
மிளகாய் தூள்  – 2 டீஸ்பூன்
சில்லி சாஸ் –  2 டீஸ்பூன்
உப்பு  – தேவையான அளவு
எண்ணெய்  – தேவையான அளவு
பூண்டு  – 4 (அரைத்து)
வெங்காயம்  – 1/2 (அரைத்து)
மிளகு தூள் – 2 டீஸ்பூன்

செய்முறை

முதலில், பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

பின், ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு, பூண்டு மற்றும் வெங்காயம் இவை அனைத்தையும் போட்டு நன்றாக பிரட்டி கொள்ளவும்.

பின், இதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கிண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும். பின், இதில் நாம் எடுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து கிளறி கொள்ள வேண்டும்.

ஒரு தட்டில் கார்ன் பிளக்ஸ் எடுத்து அதனை நொறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.

பின், ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை போட்டு பிரட்டி எடுக்கவும்.

பன்னீரை தனி தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

இதனை ஒரு அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பன்னீரை பிரிட்ஜில் இருந்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.

இதனை அப்படியே சூடாக பரிமாறலாம்.

Sharing is caring!