வேர்க்கடலை-ஜவ்வரிசி கிச்சடி செய்வது எப்படி ??

எப்போது ரவையில் கிச்சடி செய்து அலுத்து விட்டதா? இன்று வித்தியாசமான சத்தான சுவையான வேர்க்கடலை-ஜவ்வரிசி கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – ஒரு கப்,
ஜவ்வரிசி – அரை கப்,
உருளைக்கிழங்கு – 1
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, எலுமிச்சைச் சாறு – தலா ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி பொடித்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற விடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை போடவும்.

அடுத்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் துண்டுகளைப் போட்டு, சிறிது நேரம் வதக்கவும்.

பிறகு இதில் ஊற வைத்த ஜவ்வரிசி, உப்பு சேர்த்து, 5 நிமிடம் கிளறவும்.

வேர்க்கடலைப் பொடி சேர்த்துக் கிளறி, கீழே இறக்கும்போது கொத்தமல்லி தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

சூப்பரான வேர்க்கடலை-ஜவ்வரிசி கிச்சடி ரெடி.

Sharing is caring!