சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாலட் செய்வது எப்படி ??

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் அதிகளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியவை. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் குறைந்தளவு கொழுப்புச்சத்தும், அதிகளவு நார்ச்சத்தும் உள்ளன.

தேவையான பொருட்கள்

சர்க்கரைவள்ளிக்கிழங்கு – 2,
வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 1 (நறுக்கியது),
இஞ்சி – 1 துண்டு (நறுக்கியது),
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை

சர்க்கரைவள்ளிக்கிழங்கை குக்கரில் 3 விசில் வரும்வரை வேக வைக்கவும்.

தோல் உரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.

இதில் சிறு துண்டுகளாக வெட்டிய சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து வதக்கவும்.

வெந்தவுடன் சூடாகப் பரிமாறவும்.

Sharing is caring!