அருமையான சுவையில் வித்தியாசமான டிபன் அவல் உருளை உப்புமா

டிபன் என்றால் இட்லி, தோசை, பூரி என வழக்கமான உணவு சலித்து போய் விட்டதா. வித்தியாசமாக அவல் உருளை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை;

அவல் – அரை கப்
வெங்காயம் – 1
உருளைக்கிழங்கு – 1
இஞ்சி – 1/2
பச்சை மிளகாய் – 3
மஞ்சள் தூள் – சிறிதளவு
கடுகு- ½ ஸ்பூன்,
சீரகம் – ½ ஸ்பூன்,
உளுந்து – ½ ஸ்பூன்,
கடலைப் பருப்பு – 1/2 ஸ்பூன்,
வேர்க்கடலை – 1 ஸ்பூன்,
கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சம் பழம் – 1/2
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: வெங்காயம் மற்றும் இஞ்சியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து மிளகாயை கீறிக் கொள்ளவும். அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்னர் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், உளுந்து போட்டு தாளிக்கவும். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், வேர்க்கடலை, கடலை பருப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு, அவல் சேர்த்து வதக்கி கொத்தமல்லித் இலை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால் அவல் உருளை உப்புமா ரெடி.

Sharing is caring!