குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கிய டிஃபன்!!

தினமும் தோசை… இட்லி… உப்புமா என்றால் குழந்தைகள் முகம் சுளிப்பார்கள். புதுமையான முறையில், அதே சமயம் சத்துள்ள சுவையான காலை உணவாக கொடுத்தால் குழந்தைகளின் ஆரோக்கியம் கியாரன்டி என்று தாய்மார்கள் நிம்மதியாக இருக்கலாம்.

காராமணி பிடி கொழுக்கட்டை

தேவையானவை

வறுத்து, அரைத்த அரிசி மாவு – 1 கப்,
காராமணி – ½ கப்,
துருவிய தேங்காய் – ½ கப்
வெல்லம் – ½ கப்
ஏலத்தூள் – ½ டீஸ்பூன்
நெய் – சிறிதளவு

செய்முறை

காராமணியை வறுத்து சிறிதளவு நீர் ஊற்றி வேக வைத்து மசித்துக் கொள்ளவும். வெல்லத்தை, 2 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டவும். இதில் துருவிய தேங்காய், நெய், காராமணி, ஏலத்தூள், அரிசி மாவு போட்டு பிசைந்து, சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து நெய் தடவிய தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். மிக மிக ஆரோக்கியமான கொழுக்கட்டை தயார். இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது.

வாழைப்பழ சப்பாத்தி

தேவையானவை

வாழைப்பழம் – 3
கோதுமை மாவு – 3 கப்,
காய்ச்சிய பால் – 1 கப்
பொடித்த சர்க்கரை –
2 டீஸ்பூன்
எண்ணெய் – சிறிதளவு

செய்முறை

வாழைப்பழத்தை துண்டுகளாக்கி பால், சர்க்கரை சேர்த்து அரைக்கவும். பாத்திரத்தில் கோதுமை மாவில் வாழைப்பழக் கூழ் சேர்த்து பிசையவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். சப்பாத்தி மாவு போல பிசைந்து, திரட்டி, தவாவில் இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். பொட்டாசியம் சத்து நிறைந்தது.

Sharing is caring!