இட்லியில் சுவையான 65 செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இட்லியில் சுவையான 65 செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

இட்லி
கடலைமாவு
பெரிய வெங்காயம்
மிளகாய் தூள்
தக்காளி
சீரகம்
எண்ணெய்
உப்பு
இஞ்சி-பூண்டு விழுது
மல்லித்தழை

செய்முறை: முதலில் தக்காளியை வெட்டி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் பெரிய வெங்காயம் ஒன்றை பொடி பொடி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின் மிளகாய் தூள் மற்றும் கடலை மாவை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து வெட்டி வைத்துள்ள இட்லியை துண்டுகளையும் அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி இந்த கடலை மாவும், மிளகாய் தூளும் கலந்த இட்லியை பொரித்து எடுக்கவும்.

அதன் பின் வேறொரு கடாயில் மீண்டும் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சீரகம் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி வெங்காயத் துண்டுகள் மற்றும் அரைத்து வைத்துள்ள தக்காளி சாறை ஊற்றி கெட்டியான பதத்திற்கு வதக்கி எடுக்கவும்.

அதன்பின் பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை அதில் போட்டு கிளறி விட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் அட்டகாசமான இட்லி 65 வீட்டிலேயே தயார்.

Sharing is caring!