வீட்டிலேயே சுவையான முறையில் தயிர் பூரி செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
வீட்டிலேயே சுவையான முறையில் தயிர் பூரிகளை செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குட்டி பூரிகள் – 10
தயிர் – ஒரு கப்,
உப்பு, சர்க்கரை, சாட் மசாலா பொடி – தேவையான அளவு,
உருளைக்கிழங்கு – 2,
காய்ந்த பட்டாணி – கால் கப்,
ஸ்வீட் சட்னி – 10 டீஸ்பூன்,
ஓமப்பொடி- தேவையான அளவு.
செய்முறை: பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் வேக வைக்கவும். குட்டி பூரிகளை வரிசையாக தட்டில் அடுக்கவும்.
தயிருடன் உப்பு, சர்க்கரை, சாட் மசாலா பொடி சேர்த்துக் கலக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்க்கவும். பூரியின் மேல் பகுதியில் ஓட்டை போட்டு தயிர் கலவை, சிறிதளவு உருளைக்கிழங்கு, பட்டாணி, ஸ்வீட் சட்னி விட்டு பூரியை நிரப்பி, மேலே ஓமப்பொடியை தூவி பரிமாறவும்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S