வீட்டிலேயே நம் பாரம்பரியத்துடன் கூடிய சத்து மாவு தயாரிப்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

உண்மையான நம் பாரம்பரிய சத்து மாவு தயாரிப்பது எப்படி? என்று பார்ப்போம். இந்த மாவு குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

தேவையான பொருட்கள்:

ராகி 2 கிலோ
சோளம் 2 கிலோ
நாட்டு கம்பு 2 கிலோ
பாசிப்பயறு அரை கிலோ
கொள்ளு அரை கிலோ
மக்காசோளம் 2 கிலோ
பொட்டுக்கடலை ஒரு கிலோ
சோயா ஒரு கிலோ
தினை அரை கிலோ
கருப்பு உளுந்து அரை கிலோ
சம்பா கோதுமை அரை கிலோ
பார்லி அரை கிலோ
நிலக்கடலை அரை கிலோ
மாப்பிள்ளை சம்பா அவல் அரை கிலோ
ஜவ்வரிசி அரை கிலோ
வெள்ளை எள் 100 கிராம்
கசகசா 50 கிராம்
ஏலம் 50 கிராம்
முந்திரி 50 கிராம்
சாரப்பருப்பு 50 கிராம்
பாதாம் 50 கிராம்
ஓமம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
பிஸ்தா 50 கிராம்
ஜாதிக்காய் 2
மாசிக்காய் 2

செய்முறை: ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும்.அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும்.

மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன.

தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை இந்த அளவு வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும். இந்த சத்துமாவு உங்கள் குழந்தைகள் மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவரின் ஆரோக்கியத்தை உயர்த்தும்.

சத்துமாவு, தானியங்கள், முளை கட்டலாம், பார்லி, நிலக்கடலை

Sharing is caring!