சுவைமிகுந்த முட்டை ஆம்லெட் குழம்பை செய்து கொடுத்து அசத்துங்கள்

சுவையான முறையில் முட்டை ஆம்லெட் குழம்பை செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரின் பாராட்டுக்களை பெறுங்கள். இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முட்டை : 4
சின்ன வெங்காயம் : 20
பெரிய வெங்காயம் : 1
கருவேப்பிலை : 5 இலைகள்
பச்சை மிளகாய் : 2
சிவப்பு மிளகாய் : 5
தேங்காய் துருவல் : 5 டேபிள் ஸ்பூன்
சீரகம் : 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் : 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை : 1 டீஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
நல்லெண்ணெய் : 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை: முட்டையை உடைத்து அதில் சிறிது உப்பு சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கி வைத்து கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி , முட்டை கலவையை ஊற்றி கனமான ஆம்லெட் செய்ய வேண்டும்.

கலக்கி வைத்துள்ள முட்டை கலவை முழுவதையும் ஆம்லெட் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். மிளகாய் , சீரகம் தேங்காய் துருவலை அரைத்து கொள்ளவும் . பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும் .

அதன்பின் அரைத்த மசாலாவை போட்டு நன்றாக வதக்கி சிறிது தண்ணீர், மஞ்சள் தூள் , உப்பு சேர்க்கவும் குழம்பு கெட்டியானதும் ஆம்லெட் துண்டுகள் மற்றும் கொத்தமல்லி இலையை போட்டு இறக்கவும். சுவையான முட்டை ஆம்லெட் குழம்பை சூடாக பரிமாறுங்கள். உங்கள் குடும்பத்தினரின் பாராட்டுக்களை பெறுங்கள்.

Sharing is caring!