தேர்தலில் போட்டியிடவில்லை… ரிவர்ஸ் கியர் போட்ட நடிகர் மன்சூர் அலிகான்

ஜகா வாங்கிய நடிகர் மன்சூர் அலிகான்… தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் திடீரென அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக, அதிமுக நேரடியாக மோதுகின்றன. இங்கு அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணியும், திமுக சார்பில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியும் களம் காண்கின்றனர்.

இவர்கள் தவிர நடிகர் மன்சூர் அலிகானும் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். இதனால் கடந்த சில நாட்களாக கோவை தொண்டாமுத்தூரில் முகாமிட்டிருந்த அவர் பொதுமக்களை கவரும் விதத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் இந்த தேர்தல் வேண்டாம் என்று சென்னை கிளம்பிவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், அமைச்சர் வேலுமணிக்கு ஒரு நல்ல பெயர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவரது இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

Sharing is caring!