அதிக சத்துக்கள் நிறைந்த மல்டி கீரை சூப் செய்முறை

கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப் செய்து கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பும் அளவிற்கு மல்டி கீரை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய முளைக்கீரை – 4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய சிறுகீரை – 4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பசலைக்கீரை – 4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை – சிறிதளவு
சோள மாவு – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
வெண்ணெய், நெய் – தலா ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதலில் சோள மாவை 250 மில்லி தண்ணீர் விட்டுக் கரைத்து கொள்ள வேண்டும். பின்னர், முளைக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரையை நெய் விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.

கீரை நன்கு வதங்கியதும் அதில் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அதில் கரைத்து வைத்த சோள மாவை ஊற்றி கொதிக்கவிட்டு, வெண்ணெய் சேர்த்து இறக்க சத்தான மல்டி கீரை சூப் ரெடி. பல கீரைகளை இதில் சேர்ப்பதால், அதன் அனைத்து சத்துக்களும் முழுமையாக குழந்தைகளுக்கு கிடைக்கும்.

Sharing is caring!