வீட்டிலேயே எளிமையான முறையில் மசாலா பால் தயார் செய்யும் முறை

நாம் கடைகளில்தான் மசாலா பாலினை வாங்கிக் குடிப்போம். நாம் வீட்டிலேயே மசாலா பால் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை

பால் – 2 கப்
சர்க்கரை – 1 ஸ்பூன்
பனங்கற்கண்டு – 1 ஸ்பூன்
மிளகுத் தூள் – 1/4 ஸ்பூன்
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
பாதாம் – 5
பிஸ்தா – 5
குங்குமப்பூ – சிறிதளவு

செய்முறை: பாதாம் மற்றும் பிஸ்தாவை 2 மணி நேரம் நன்கு ஊற வைத்து, தோலுரித்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அடுத்து பாலில் குங்குமப்பூவைப் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் ஊறவைத்த குங்குமப்பூ கலவை, மிளகுத் தூள், சர்க்கரை, பனங்கற்கண்டு, அரைத்த பாதாம்- பிஸ்தா கலவையைச் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் மசாலா பால் ரெடி. இது குழந்தைகளும் ஆரோக்கியத்தையும் உயர்த்தும்.

Sharing is caring!