அதிக நன்மைகள் நிறைந்த பயறு தினை பெலாபாத் செய்து பாருங்கள்

அதிக நன்மைகள் நிறைந்த பயறு தினை பெலாபாத் செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.

தேவையானவை:

பச்சரிசி குருணை அரிசி – 1/2 கப்
தினை – 1/2 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
முளைக்கட்டிய பாசிப்பயறு – 1/2 கப்
சின்ன வெங்காயம் – 1/4 கப்
நறுக்கிய தக்காளி – அரை கப்
மிளகு -1 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
பட்டை – 1
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
சாம்பார் பொடி – ஒன்றரை டீஸ்பூன்
கொத்துமல்லித்தழை – தேவையான அளவு

செய்முறை: தினை மற்றும் பச்சரிசிக் குருணையை 20 நிமிடங்கள் தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். குக்கரில் பாசிப்பருப்பு, முளைக்கட்டிய பாசிப்பயறு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து இரண்டரை கப் தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி விசில் போட்டு மிதமான தீயில் பத்து முதல் பதினைந்து நிமிடம் வேக வைக்கவும்.

வெந்ததும் அப்படியே ஆற விடுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து, சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, மிளகு, பட்டை, கறிவேப்பிலை, சீரகம், காய்ந்த மிளகாய், வெந்தயம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அவை நன்றாகப் பொரிந்ததும், நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயத்தின் நிறம் மாறியதும் நறுக்கிய தக்காளி, சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள்.

வெந்த‌ அரிசி கலவையை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

Sharing is caring!