Zoom ஊடான கற்றல் – கற்பித்தல் : சில பிரதிபலிப்புக்கள்

Zoom ஊடான கற்றல் – கற்பித்தல் : சில பிரதிபலிப்புக்கள் (Teaching – Learning through zoom : some reflections)
@ நன்மைகள் (Advantages)
1.) COVID -19 இக்கட்டான சூழலில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளை தக்கவைக்க பெரிதும் உதவுகிறது.
2.) தொழில்நுட்பத்தினை கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளில் ஒன்றிணைக்க (Integration of technology) முடிகிறது.
3.) ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான பெளதீக இடைவெளிசார் தடைகளை (Physical distance barriers) அகற்றுகிறது.
4.) கற்றல் – கற்பித்தலில் வெளிப்படைத்தன்மை (Transperancy) பேணப்படுகின்றது. – மாணவன்/மாணவி மட்டுமன்றி குடும்பம் முழுதும் கற்கிறது.
5.) இதனால் உலகளாவிய வகுப்பறை (Global classroom) என்ற எண்ணக்கரு வலுவடைந்து வருகிறது.
சவால்கள் (Challenges)
1.) கற்றலில் மாணவர் ஒழுக்கத்தை உறுதி செய்ய முடியாதுள்ளது.
2.) மாணவர் கற்லை உறுதி செய்வது கடினமாக உள்ளது.
3.) நேருக்கு நேரான (face to face) அமர்வுகளில் உள்ள உயிரோட்டத்தை உணரமுடிவில்லை.
4.) எல்லா பிரதேசங்களிலும் ஒரேசீரான இணைய பரம்பல் (Network Coverage) காணப்படாமை.
5.) மாணவர்களுக்கு ஏற்படும் கண் பதிப்புக்கள் மற்றும் உடல்சார் பாதிப்புகள்
6.) நேருக்கு நேரான கற்றல் – கற்பித்தலை விட செலவீனங்கள் அதிகம்.
7.) கணிப்பிடுகள் மற்றும் மதிப்பீடுகள் (Assessment and Evaluation) மேற்கொள்வது சிரமமாக இருக்கும்.
@ வினைத்திறனை zoom கற்றல் -_கற்பித்தலுக்கான சிபார்சுகள்
1.) மிகையான தயார்படுத்தல் (Excess preparation)
2.) Power point presentation slides துணையுடன் கற்பித்தல்.
3.) தினமும் ‘வினைத்திறனான வினாக்கேட்டல்’ (Active Questioning techniques) நுட்பத்தை பயன்படுத்த்ல்.
4.) தினமும் அனைவரிடமும் வினாக்கள் கேட்டல்
5.) தினசரி கற்பிக்கும் விடயங்களை மதிப்பிடக்கூடிய ஒப்படைகளை (Short Assignments) வழங்குதல்
6.) Mobile phone & tablet இற்குப் பதிலாக labtop & கணனியைப் பயன்படுத்தி கற்பித்தல் மற்றும் கற்றல்.
உலகளாவியரீதியில் மாறிவரும் கற்றல் – கற்பித்தல் கட்டளைப்படிமத்திற்கு ( Teaching- learning paradigm shift) ஏற்ப நாமும் மாறுவோம்.
ஆ.நித்திலவர்ணன்

Sharing is caring!