ஏன் மாசி மகம் நன்னாளில் புனித நீராட வேண்டும் தெரியுமா?

பொதுவாக ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில் ஆறு, கடல், நதிகள் என நிராடி வருவது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அது போல மாசி மக நாளும் மிக சிறப்பான ஒன்று. பொதுவாக மகம் ஜெகமாளும் என பழமொழி கூறிவார்கள். இந்த மகம் நட்சத்திரம் சிம்ம ராசிக்குரியது.

இதன் ராசி அதிபதி சூரியன் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆளுமை திறமை அதிகம் இருக்கும். மேலும் மகம் நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம்.

லௌகீக வாழ்வில் ஒரு ஆன்மாவை ஈடுபட வைப்பவர் ராகு என்றால் மோட்சத்திற்கு அழைத்து செல்பவர் கேது.

இந்த மக நட்சத்திர நாளில் சந்திரன் சஞ்சாரம் செய்வார். அதாவது கால புருஷனின் 5 ம் இட அதிபதியாகிய சூரியனின் வீட்டில் சந்திரன்.

5 ம் இடம் பூர்வ புண்ணியத்தை குறிக்கும். சூரியன் ஆன்மா என்றால் சந்திரன் உடல். அத்துடன் சந்திரன் புனித நீருக்கு அதிபதி.

சூரியனின் பார்வை தன் வீட்டை பார்ப்பதுடன் சந்திரன் சஞ்சரிக்கும் போது சூரியன், சந்திரன், கேதுவின் தொடர்பு உண்டாவதால் ஒவ்வொரு ஜீவாத்மாவின் கர்ம வினையை போக்கும் சக்தி வாய்ந்த நாளாக மாசி மகம் விளங்குகிறது.

இப்படியான மாசி மகம் உடலை பரிசுத்தம் அடையச்செய்வதோடு கர்ம வினையையும் குறைக்கிறது. சூரிய சந்திரனின் தொடர்பு உண்டாகும் போதே இப்படியான பலன் நமக்கு கிடைக்கிறது.

Sharing is caring!