ஏப்ரலில் திறக்கப்படுகிறது கேதார்நாத் கோயில்!

உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோயில் நடை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ம் திகதி  திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இமயமலைத் தொடரில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில்  கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இதனை பார்வையிட நாடு முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருகை தருகின்றனர். குளிர் காலங்களை தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டுமே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அந்த வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில்  6 மாதத்திற்குப் பிறகு வரும் ஏப்ரல் மாதம் 29-ம் திகதி கோவில் நடை திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!