ஒலி அலாரம் வைத்திருப்பவரா நீங்கள்? எச்சரிக்கையூட்டும் ஆய்வுகளின் முடிவு!

எச்சரிக்கையூட்டக் கூடிய கடுமையான அலார ஒலிகள் மூளையின் செயல்திறனை பாதிக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

நாம் பெரும்பாலும் காலையில் எழுந்தவுடன் விழிப்பது அலாரம் ஒலியைக் கேட்டுத்தான். சிலர் எச்சரிக்கையூட்டும் ஒலியை வைத்திருப்பர். சிலர் மனதுக்கு இதமாக மெல்லிசையுடன் கூடிய ஒலியை வைத்திருப்பர்.

இந்நிலையில், அலார ஒலிகள் கூட ஒருவரின் மனதளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மெல்லிய இசையுடைய அலாரங்கள், கவலையை விலக்கி, மன அமைதியை கொடுக்கும் என்றும், மெல்லிசை அலாரங்கள் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான முக்கிய அங்கமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் எச்சரிக்கையூட்டக்கூடிய கடுமையான அலார ஒலிகள் மனதளவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும், ஒரு கட்டத்தில் மூளையின் செயல்திறனை கூட பாதிக்கும் என்று கூறுகின்றனர்.

50 பேரிடம் நடத்திய ஆய்வில், ஒவ்வொரு நபரும் வித்தியாசமான அலார ஒலியை பயன்படுத்தி அதன் அடிப்படையில் மனக்குழப்பம் மற்றும் விழிப்புணர்வு அளவை மதிப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ய்வாளர் ஸ்டூவர்ட் மெக் பார்லேன் என்பவர் இதுகுறித்து கூறுகையில், ‘காலையில் நல்ல மனநிலையுடன் எழுந்திருக்க வேண்டும். அன்றைய நாள் முழுவதும் செய்யப்போகும் சிறந்த பணிக்கு நல்ல மனநிலை அவசியம். ஒருவேளை சரியான மனநிலையில் எழுந்திருக்காவிட்டால் அன்றைய பணிகள் முடங்கிப்போகும். எனவே, காலை நீங்கள் எழுவதற்கு முன்னாலே உங்கள் காதுகளில் கேட்கப்படும் ஒலி இனிமையானதாக, மெல்லியதாக உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும்’ என்று கூறுகிறார்.

Sharing is caring!