காங்கேசன்துறை,மாம்பிராய் ஞானவைரவர் தேர்த் திருவிழா 30 ஆண்டுகளின் பின்னர்!

1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக 28 ஆண்டுகள் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உயர் பாதுகாப்பு வலயமாக குறித்த கோயில் அமைந்துள்ள பகுதி காணப்பட்டது.

2018ஆம் ஆண்டு மக்களின் மீள் குடியேற்றத்திற்காக இப்பகுதி விடுவிக்கப்பட்டிருந்தது. இதன்போது மாம்பிராய் ஞானவைரவர் ஆலயம் இடித்து அழிக்கப்பட்டுருந்தது.அழிக்கப்பட்ட ஆலயத்தை அப்பகுதி மக்கள் தமது சொந்த முயற்சியில்,புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வரும் அப்பகுதி மக்களது நிதிப் பங்களிப்பில் ஞானவைரவர் கோயில் புதுப்பொலிவுடன் கட்டிமுடிக்கப்பட்டது.

கடந்த 29ஆம் திகதி எண்ணைக் காப்பு சார்த்தி 30ஆம் திகதி கொடியேற்றத் திருவிழா ஆரம்பமானது. பதினொராம் நாளான இன்று தேர்த் திருவிழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.தேரில் மாம்பிராய் ஞானவைரவர் ஏறி வலம் வந்த காட்சி மக்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்க,அரோகரா கோசத்துடன் தேர்த் திருவிழா இனிதே நடைபெற்றது.

Sharing is caring!