சக்தி வாய்ந்த சுக்கிர பார்வையால் திடீரென்று திசைமாறிப் போன 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை!

மாளவியா யோகம் மகத்தானது. சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் ரிஷபம் அல்லது துலாமில் ஆட்சியோ, மீனம் ராசியில் உச்சமோ பெற்றிருந்து அது கேந்திர ஸ்தான வீடுகளான 1,4,7,10 ஆம் இடமாக அமையப்பெற்றால் அந்த ஜாதகருக்கு மாளவியா யோகம் அமையும்.

இந்த மாளவியா யோகம் அமைந்த ஜாதகர்களுக்கு மண வாழ்க்கை அற்புதமாக இருக்கும், கணவன் மனைவி எப்போதுமே காதல் வாழ்க்கை வாழ்வாங்க, அவங்களுடைய நெருக்கம் அலாதியானது. எப்பவுமே சந்தோஷமாக இருப்பாங்க.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். வீடே லட்சுமி கடாட்சமாக இருக்கும்.

கோச்சார ரீதியாக சுக்கிரன் கேந்திர ஸ்தானங்களில் ஆட்சி பெற்று அமரும் போதும் இந்த சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும்.

இந்த பங்குனியில் அதாவது மார்ச் 28ல் சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமரும் போது சில ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகம் கிடைக்கும் அது எந்த ராசிக்காரர்கள் லக்னத்தில் பிறந்தவர்கள் என்று பார்க்கலாம்.

ரிஷபம்

சுக்கிரன் சுகத்தினை தருபவர். துன்பங்களில் இருந்து விடுதலை கொடுத்து செல்வ செழிப்போடு வாழ வழி செய்பவர். நமக்கு மட்டும் ஏன் எதுவுமே நடக்க மாட்டேங்குது என்று ஏங்கி தவித்த ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வ வளத்தை அள்ளிக்கொடுக்கப் போகிறார் சுக்கிரன்.

ஜோரா கை தட்டுங்க ரிஷபம் ராசிக்காரங்களே, காதல் நாயகன் சுக்கிரன் இன்னும் கொஞ்ச நாளில் உங்கள் ராசியில் குடியேறப்போகிறார்.

இதனால உங்களுக்கு மாளவியா யோகம் கிடைக்கும். முகத்தில பொலிவும் அழகும் கூடும். ரொம்ப உற்சாகமாக இருப்பீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை அதிகமாகும். தங்க நகைகள் வாங்குவீங்க. வீட்டிற்குத் தேவையான ஆடம்பரமான பொருட்களை வாங்குவீங்க. உங்களுக்கு சுப செலவுகள் ஏற்படும்.

கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் அதிகரிக்கும். பெண்களுக்கு இதுபோல ஒரு சந்தோஷத்தை நான் அனுபவிச்சதில்லைன்னு கொண்டாடப்போறீங்க. உங்க பேச்சில அது வெளிப்படும். நீங்களா இப்படி எல்லாம் பேசுறீங்கன்னு எல்லோரும் ஆச்சரியமாக பார்ப்பாங்க. சந்தோஷமாக அனுபவிக்க தயாராகுங்க.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரங்களுக்கு எல்லாமே நல்லா இருக்கு ஆனா வசதி வாய்ப்பு மட்டும் இன்னும் கைகூடி வரலயேன்னு நினைக்கறீங்களா? இந்த வரப்போகுதுல்ல. சுக்கிரன் உங்க ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திற்கு வந்து ஆட்சி பெற்று ஜம்முன்னு அமரப்போகிறார்.

இது மாளவியா யோக அமைப்பு. பத்தில் சுக்கிரன் வந்தால் சுகமான பதவியை கொடுப்பார்னு சொல்லுவாங்க. நல்ல வேலை கிடைக்கப் போகுது. சிலருக்கு பதவி உயர்வை கொடுப்பார்.

இதுநாள் வரைக்கும் ஏன் இந்த வேலைக்கு போறோம்னு வெறுப்பா இருந்த உங்களுக்கு தொழில் ஸ்தானத்தில் அமரும் சுக்கிரனால் உங்கள் வேலையில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி நெருக்கம் அதிகமாகும். நிறைய சந்தோஷ சமாச்சாரங்கள் கிடைக்கும். துணையோட அன்பை திகட்ட திகட்ட அனுபவிக்க போறீங்க.

விருச்சிகம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். சுக்கிரன் களத்திர காரகன் களத்திர ஸ்தான அதிபதி, இது காரகோ பாவ நாஸ்தின்னு சொல்வாங்க.

ஆனா கவலைப்படாதீங்க. வாழ்க்கை துணையோட அன்பையும் காதலையும் திகட்ட திகட்ட அனுபவிப்பீங்க. சிலருக்கு புதிய காதல் அரும்பும்.

காதலில் சிக்கிய சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கப்போறீர்கள். அது நகையாகவோ, ஆடம்பர பொருளாகவோ இருக்கலாம். திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். கல்யாணம் முடிந்தும் ஹனிமூனை தள்ளிப்போட்டு வந்தவர்கள் இனி ஜாலியாக கிளம்புங்க.

கும்பம்

உங்க சுக ஸ்தான அதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். உங்களுக்கு மாளவியா யோகம் தேடி வருகிறது. உங்க வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீங்க. சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும்.

வண்டி வாகனம் வாங்குவீங்க. ரொம்ப நாளாக கார் வாங்கணும்னு நினைச்சிட்டு இருந்த உங்களுக்கு நேரம் காலம் கூடி வருது.

மனைவிக்கு நகை வாங்கித்தரனும் ஆசைப்பட்டா, அட்சய திருதியை வரைக்கும் காத்திருக்க வேண்டாம், மார்ச் இறுதியிலேயே வாங்கிக் கொடுங்க நகை விலையும் கெஞ்சம் கம்மியாக வாய்ப்பு இருக்கு. இந்த யோக காலத்தை சந்தோஷமாக அனுபவிக்க தயாராகுங்க கும்பம் ராசிக்காரர்களே.

 

Sharing is caring!