தஞ்சாவூரில் ஸ்ரீஐயப்ப தர்ம சேவா சங்க செயற்குழு கூட்டம்

தஞ்சாவூரில் ஸ்ரீ ஐயப்ப தர்ம சேவா சங்கத்தின் செயற்குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாநில தலைவர் கிருஷ்ண சாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் மதிவாணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் மண்டலபூஜை மற்றும் மகரஜோதி காலங்களில் சங்கத்தின் சார்பாக எரிமேலியில் ஜனவரி 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை அன்னதானம் நடைபெற உறுதுணையாக இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கபட்டது.

இந்தாண்டு பாராட்டு விழா கூட்டம் நடத்துவது, கடந்த வருடங்களை போலவே இந்த வருடத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் அனைத்து முக்கிய ஆலய விழாக்களிலும் அன்னதானம் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் பாராட்டு விழா கூட்டத்தை காரைக்கால் மாவட்டத்தில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Sharing is caring!