பைசர், மாடர்னா தடுப்பூசிகளை டில்லி அரசுக்கு விற்பனை செய்ய மறுப்பு தெரிவித்ததாக முதல்வர் குற்றச்சாட்டு

டில்லி முதல்வர் குற்றச்சாட்டு… அமெரிக்காவின், ‘பைசர்’ மற்றும் ‘மாடர்னா’ தடுப்பூசிகளை டில்லி அரசுக்கு விற்பனை செய்ய அந்நிறுவனங்கள் மறுத்துவிட்டதாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: டில்லியில் கொரோனா இரண்டாம் அலையின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் மூன்றாம் அலை ஏற்படுவதை தடுக்க, தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இதற்காக சீனாவில் இருந்து, 6,000 ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்துள்ளோம். இதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பீஜிங்கில் உள்ள நம் துாதரக அதிகாரிகள் பெரிதும் உதவினர். தடுப்பூசி பற்றாக்குறையை தவிர்க்க, அவற்றை இறக்குமதி செய்வதற்காக அமெரிக்காவின் ‘பைசர்’ மற்றும் ‘மாடர்னா’ நிறுவனங்களுடன் பேச்சு நடத்தினோம்.

ஆனால், மாநில அரசுகளிடம் நேரடியாக தடுப்பூசிகள் வழங்க, அவர்கள் மறுத்துவிட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!