ஒரே நாளில் நிகழ உள்ள மூன்று வானியல் அதிசயங்கள்

மூன்று வானியல் அதிசயங்கள்… இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம், ப்ளட் மூன்(bloodmoon), மற்றும் சூப்பர் மூன் ஆகிய 3 வானியல் அதிசயங்களும் ஒரே நாளில் நிகழவுள்ளது.

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல், சந்திரனின் மீது விழுவதே சந்திர கிரகணம். நாளை நிகழவுள்ள முழு சந்திர கிரணத்தை, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பார்க்கலாம்.

பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு அருகே நிலவு வரும் போது வழக்கத்தை விட பெரிதாக தெரியும் இதுவே சூப்பர் மூன். சந்திர கிரகணத்தின் போது நிலவு, ரத்தச் சிவப்பு நிறத்தில் வழக்கத்தை விட பிரகாசமாக காட்சி அளிக்கும். இந்நிகழ்வை ப்ளட் மூன் என்பார்கள். இவை மூன்றும் இன்று புதன்கிழமை ஒரே நாளில் நிகழவுள்ளது.

Sharing is caring!