அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்களை கட்டுப்படுத்த புதிய நடைமுறை!

அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்களை கட்டுப்படுத்த புதிய நடைமுறை!இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய நடைமுறையை அமுலாக்கவுள்ளது.

அடுத்தவாரம் ஜப்பான் இந்த நடைமுறையை அமுலாக்கவுள்ளது.

3 முறை ஜப்பானில் ஒருவர் சட்ட ரீதியாக அகதி விண்ணப்பத்தை மேற்கொள்ள முடியும்.

அதன் பின்னரே அவரை நாடுகடத்தவோ, அகதிகள் முகாமிற்கு மாற்றவே அந்த நாட்டின் குடிவரவுத்திணைக்களத்துக்கு அதிகாரம் வழங்கப்படும்.

ஆனால் புதிய நடைமுறையின்படி, முதல் விண்ணப்பத்தின் போதே குறித்த அகதி விண்ணப்பதாரியை நாடுகடத்த அல்லது அகதி முகாமிற்கு மாற்ற தீர்மானிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் நீதி அமைச்சர் யோகோ காமிகாவா இதனைத் தெரிவித்துள்ளார்.

உண்மையான அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!