அடிப்படைக் காரணங்களை சர்வதேசத்துக்கு விளக்கம் – ஜனாதிபதி

புதிய பிரதமர் நியமனத்துக்கான அடிப்படைக் காரணங்களை சர்வதேசத்துக்கு விளக்கம் கொடுத்துள்ளதாகவும், புதிய அரசாங்கத்துக்கு சர்வதேச உதவி குறைவில்லாமல் கிடைப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் மீது யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லையெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் முன்னிலையில் நேற்று (07) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சபாநாயகரின் செயற்பாடுகள் தொடர்பிலும், சபாநாயகருக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Sharing is caring!