அதிகரிக்காது….சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்காது

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், சமையல் எரிவாயுவின் விலை 158 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வௌியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு, நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், விலைத் திருத்தம் அவசியமானதா என்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் கீழ் ஆய்வொன்றை ஆரம்பித்துள்ளதாக ரஞ்சித் அசோக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்விதத் தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Sharing is caring!