அதிக புத்தகங்களை வாசித்தால் புவமைப்பரிசில்..!

நாட்டிலுள்ள அரச பாடசாலை மாணவர்களில் அதிக புத்தகங்களை வாசித்த 100 பேருக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார்.

இலங்கை புத்தக கண்காட்சியாளர்களின் சங்கம் 20 ஆவது முறையாக கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச புத்தகக் கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

Sharing is caring!